மலேசியாவில் மைத்திரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அங்கு ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மலேசியா கோலாலம்பூரில் ஜனாதிபதி தங்கியுள்ள ஹோட்டலுக்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதுடன் இதில் 10 முதல் 15 பேர் வரையானோர் கலந்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
போர்க்குற்றவாளிகளை மலேசியாவுக்குள் அனுமதிக்க வேண்டாமெனவும் அவரை உடனடியாக வெளியேற்றுமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி மைத்திரியின் விஜயத்தையொட்டி அந்த பகுதியில் அந்நாட்டு அரசாங்கம் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)




