இன்று கொழும்பில் ஒன்று கூடவுள்ள மலையக இளைஞர்கள்
நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்ட சர்வதேச தேயிலை தினத்தையொட்டி இன்று கொழும்பில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று 16ஆம் திகதி முற்பகல் 11.30 மணிக்கு கொழும்பு ஜந்துலாம்பு சந்தியில் இந்த நிகழ்வு நடத்தப்படவுள்ளது.
சர்வதேச தேயிலை தினத்தில் போற்ற படவேண்டியவர்கள் தேனீர் சுவைக்காக வாழ்க்கையின் பல சுவைகளை அறியாத பெருந்தோட்ட தொழிலாளர் வர்க்கமே. எனவே அவர்களை கௌரவிக்கும் முகமாகவும், இதுவரை காலமும் அவர்களுக்காக உயிர்நீத்த தோட்ட தொழிலாளர் வர்க்க மாவீரர்களை நினைவு கூறவும், இன்று காலை 11.30 மணிக்கு கொழும்பு ஜந்துலாம்பு சந்திக்கு அனைவரையும் வருமாறு ஏற்பாட்டுக் குழு அழைப்பு விடுத்துள்ளது. -(3)




