தனக்கு காதலியொருவரை தேடித் தருமாறு கேட்கும் நாமல்
தனக்கு காதலியென யாரும் கிடையாது எனவும் யாரேனும் இருந்தால் தேடித் தருமாறும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஊடகவியலாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொழும்பிலுள்ள பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு நேற்று விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்ஷவிடம் அவரின் காதலியென கூறப்படும் ஒருவர் வாகன விபத்தொன்றில் சிக்கியமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அப்படி காதலி யாரும் கிடையாது. யாரேனும் இருந்தால் தேடித் தாருங்கள். அரசாங்கத்தினர் வீதியில் வெள்ளைக் கோட்டை வாகனத்தில் தாண்டிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள் தொடர்பாக விசாரணை நடத்துகின்றார்கள் ஆனால் பிணை முறி மோசடிகளில் நிதி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக விசாரணைகள் எதனையும் நடத்துவதில்லையே என அவர் தெரிவித்துள்ளார். -(3)




