ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹசன்அலியே : கட்சி அறிவிப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உத்தி யோக பூர்வ செயலாளராக ஹசன்அலியை தொடர்ந்தும் நியமிப்பதற்கு கட்சி உயர்மட்டம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக கட்சியினால் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஹசன் அலிக்கு ஏற்கனவே வாக்குறுதி அளிக்கப்பட்டதன் பிரகாரம் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப் புரிமையையும் வழங்குவதற்கும் இணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியின் செயலாளர் மற்றும் பொது செயலாளர் என இரண்டு பேர் இருக்க முடியாது எனவும் யார் அதிகாரமுள்ள செயலாளர் என்பதனை தமக்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் கட்சிக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.-(3)




