செய்திகள்

மலையக மக்கள் தொடர்பான கலந்துரையாடல் : இன்று தமிழ் சங்கத்தில்

மலையகத் தமிழர்களின் தேசியமும் புதிய அரசியல் யாப்பிற்கான முன்மொழிவுகளுக்குமான கலந்துரையாடலொன்று இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.
வெள்ளவத்தை, தமிழ்ச் சங்கத்தில் இன்று மாலை 4.30இற்கு இந்த நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.
புதிய அரசியல் யாப்பிற்கான முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடலுக்கும் ஆக்கபூர்மான ஆய்வாக அமைவதற்காக மலையக மக்கள் மீது அக்கறை கொண்ட அனைவரையும் அழைப்பதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. -(3)