போராட்டங்களுக்கு தயாராகும் மகிந்த அணி
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நாடளாவிய ரீதியில் மக்களை இணைத்து போராட்டங்களில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
இதன்படி ஜனவரி மாதம் முதல் இந்த போராட்டங்களை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர். உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு கோரியே இந்த போரட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி அந்தக் கட்சியின் தீர்மானங்களை மேற்கொண்டு மக்களை தெளிவுபடுத்தி போராட்டத்திற்கு அழைப்பதற்கான ஆயத்தங்களை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)




