செய்திகள்

நஷ்டமென்றால் புகையிலை பொருள் உற்பத்தி நிறுவனங்களை மூடிவிடுங்கள்

புகையிலை பொருட்கள் மீதான வரிகள் மற்றும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் புகையிலை பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுமென்றால் அந்த நிறுவனங்களை மூடிவிடலாம் என என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
தாம் புகையிலை பொருட்கள் மீதான வரியை அதிகரித்துள்ளமையினாலும் மற்றும் விலைகளை அதிகரித்துள்ளமையினாலும் புகையிலை உற்பத்தி நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகின்றது. அப்படியென்றால் அந்த நிறுவனங்களை மூடிவிட வேண்டியதுதான். என அவர் தெரிவித்துள்ளார்.
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் கம்பஹாவுக்கான ஒசுசலவை திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)