இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தீர்வை வரியற்ற வாகனங்களை வேறு நபர்களுக்கு விற்கும் செயற்பாடுகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நாககஹலந்த கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , அமைச்சர் கபீர்காசீம் ஆகியோர் உள்ளிட்ட 93 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. -(3)




