கிரேட்வெளி தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 8 பெண்கள் வைத்தியசாலையில்
கலஹா தெல்தொட்ட கிரேட்வெளி தோட்டதில் குளவி கொட்டுக்கு இலக்கான 8 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று காலை இவர்கள் மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த போதே குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார்கள். இவர்கள் தெல்தொட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் 3 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரம் ஒன்றில் இருந்த குளவி கூடு ஒன்றினை கழுகு ஒன்று தாக்கியதால் குளவி கூடு கலைந்துள்ளது. இதனாலேயே இங்கிருந்த பெண்கள் தாக்குதலுக்குள்ளானதாக தெரியவருகிறது. -(3)




