ஜனவரி 8 முதல் 14 வரை தேசிய நல்லிணக்க வாரம் : அமைச்சரவையில் தீர்மானம்
ஜனவரி 8ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான காலப்பகுதியை தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க வாரமாக பிரகடனப்படுத்த அரசாங்கத் தீர்மானித்துள்ளது.
இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் 2017ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 08ம் திகதி தொடக்கம் 14ம் திகதி வரையான வாரத்தை ‘தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க வாரமாக’ பிரகடனப்படுத்துவதற்கும், 2017ம் ஆண்டில் அனுஷ்டிக்கப்படவுள்ள குறித்த வாரத்துடன் இணைந்ததாக நாடு தழுவிய ரீதியில் அனைத்து பாடசாலைகள், ஊடகங்கள், அரச மற்றும் தனியார் நிர்வனங்களை மையமாகக் கொண்டு தேசிய ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்ற பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இது தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. -(3)




