விஜய் ரசிகர்களை குழப்பிய சமந்தா
இளையதளபதி விஜய் நடித்து பொங்கல் தினத்தன்று வெளிவரும் படம் பைரவா. இப்படத்தை அடுத்து அவர் அட்லீ இயக்கத்தில் மீண்டும் நடிப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தை மிகுந்த பொருட் செலவில் விஜய் படத்தில் இது வரை இல்லாத வகையில் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது தேனாண்டாள் பிலிம்ஸ்.
இந்நிலையில் இப்படத்தில் காஜல் அகர்வால் தான் கதாநாயகி என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர், ஆனால் இன்று நடிகை சமந்தா தனது ரசிகர்களுடன் பேஸ்புக்கில் லைவ் சாட்டில் ஈடுபட்டார். அதில் ஒரு விஜய் ரசிகர் எப்போது மீண்டும் விஜய்யுடன் நடிக்க போகிறீர்கள் என்ற கேள்விக்கு சீக்கிரம் நடந்தால் நடக்கும் என்று புதிராக பதில் கூறியுள்ளார்.
விஜய் 61 படத்தில் அதிகாரபூர்வமாக கதாநாயகி அறிவிக்கப்படாததால் இந்த குழப்பம் சிறிது காலம் நீடிக்க தான் செய்யும்.
N5




