செய்திகள்

அரசாங்கத்தின் சட்ட மூலம் வடமாகாண சபையில் தோற்கடிக்கப்பட்டது

மாகாண சபைகளின் அனுமதிக்காக மத்திய அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட அபிவிருத்தி தொடர்பான விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் வடமாகாண சபையினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இன்று குறித்த சட்டமூலம் ஆளுனரினால் வடமாகாண சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த சபையில் அந்த சட்டமூலத்திற்கு ஆதரவளிக்காது இருப்பதற்கு ஏகமானதாக தீர்மானிக்கப்பட்ட நிலையில் அந்த சட்டமூலம் ஏகமானதாக தோற்கடிக்கப்பட்டதாக கருதப்படுகின்றது.
இதேவேளை நேற்றைய தினம் ஊவா மாகாண சபையில் அந்த சட்டமூலம் 4 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டிருந்தது.
குறித்த சட்டமூலம் மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைக்கும் என்ற நோக்கத்திற்காகவே தோற்கடிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
மாகாண சபைகளின் அனுமதியின்றி அந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் அரசாங்கத்திற்கு சிக்கல்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)