வவுனியாவில் வினோதப் போராட்டம்: மனைவியையும் 3 பிள்ளைகளையும் சேர்த்து வைக்க கோரி கணவன் உணணாவிரதம்
தனது மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி கணவன் ஒருவர் வவுனியா, பறநாட்டாங்கல் பகுதியில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
வவுனியா, பறநாட்டாங்கல் பகுதியில் வசிக்கும் சி.சிவகுமார் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தைக்கும் அவரது மனைவிக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டிருந்தது. இதன்காரணமாக கணவனுடன் கோபித்துக் கொண்டு மனைவி தனது மூன்று பிள்ளைகளுடன் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
மூன்று தினங்கள் கடந்த நிலையிலும் மனைவி, பிள்ளைகள் வரமறுத்தமையால் தனது பிள்ளைகளையும், மனைவியையும் தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரி குறித்த குடும்பஸ்தர் பறநாட்டாங்கல் ஆலயம் அருகில் உண்ணாவிரத்தத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவரது உண்ணாவிரதத்தை கைவிடுமாறு பொலிசார், கிராம அலுவலர் தெரிவித்த போதும் மனைவி, பிள்ளைகள் வீடு வரும் வரை தனது உண்ணாவிரதம் தொடரும் என தெரிவித்து அவர் தொடர்ந்தும் உண்ணாவிரத்தில் இருந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

N5




