செய்திகள்

ரவிராஜ் கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை : இன்று அதிகாலை தீர்ப்பளிக்கப்பட்டது

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த புலனாய்வு பிரிவு உறுப்பினர்கள் மூவர் அடங்கலாக 5 சந்தேக நபர்களும் குற்றச்சாட்டுகளிலிருந்து கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 7 பேர் கொண்ட விசேட ஜூரி சபைக்கு முன்னிலையில் அது தொடர்பான வழக்கு கடந்த 18 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் அது தொடர்பான தீர்ப்பு இன்று அதிகாலை வழங்கப்பட்டது. நேற்று காலை முதல் வழக்கின் அறிக்கையிடல்கள் நடைபெற்று இன்று அதிகாலை அதன் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதன்படி சாட்சியாளர்களின் விசாரணையின்படி குற்றச்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் இல்லையெனவும் இதன்படி அவர்களை அந்த குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2006ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் திகதி கொழும்பில் நாரஹேன்பிட்டியில் வைத்து இனந்தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ராவிராஜ் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. -(3)