புசல்லாவை டேசன் தோட்டத்தில் தீ விபத்து : லயன் குடியிருப்பு முற்றாக சேதம்
கலஹா பொலிஸ் தொலுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புபுரஸ்ஸ கிராம சேவகர் பிரிவு டெல்டா வடக்கு ( டேசன் தோட்டம் ) 7ம் நம்பர் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தினால் 5 வீடுகளை கொண்ட குடியிருப்பு தொகுதி ஒன்று முற்றாக சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
இன்று முற்பகல் 11 மணியளவில் இந்த தீ வீடொன்றில் இருந்து பரவியுள்ளது. தீக்கான காரணம் மின்சார கசிவாக இருக்கலாம் என சந்தேக படும் அதே வேலையில் ஊர் மக்களின் உதவியால் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இருந்தும் குறிப்பிட்ட சில வீடுகளில் சில பொருட்கள் பொது மக்களின் உதவியால் காப்பாற்றப்பட்ட போதும் பெரும் அளவிலான பொருட்களும் வீட்டு தொகுதியும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. ஸ்தலத்திற்கு விரைந்த மின்சார சபையினர் மின்னினைப்புக்களை துண்டித்துள்ளனர்.
தோட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தோட்டத்தின் சனசமுக நிலையத்தில் தற்காலிகமாக குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். -(3)





