மயங்கி விழுந்த முன்னாள் போராளி திடீரென மரணம்: வவுனியாவில் சம்பவம்
முன்னாள் போராளியான ஆசீர்வாதம் ஸ்ரீபன் என்ற 36 வயது இளைஞன் நேற்று திடீரென மரணடைந்துள்ளார்.
புளியங்குளம் பகுதியில் பேரூந்துக்காக காத்திருந்த சமயம் திடீரென மயக்கமுற்று வீழ்ந்ததால் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் மரணமடைந்திருந்தார் என தெரியவருகின்றது.
நெடுங்கேணி – குளவிசுட்டானை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் புனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்யப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கதிர் இசைக்குழுவின் அறிவிப்பாளராக செயற்பட்டு வந்திருந்தார்.
அறிவிப்புத்துறையில் சிறந்து விளங்கிய இவர் நோய்வாய்ப்பட்டிருக்கவில்லை என உறவினர்கள் தெரிவிக்கும் நிலையில் திடீரென மரணமடைந்துள்ளமை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மயக்கமடைந்து வீழ்ந்த நிலையில் புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியாவிற்கு அனப்பப்பட்ட நிலையிலேயே அவர் மரணமடைந்துள்ளார். அத்துடன் குறித்த முன்னாள் போராளியின் இறுதிக்கிரியைகள் குளவிசுட்டானில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று யாழ்ப்பாணம் – நீர்வேலியில் உள்ள இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும் எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
N5




