செய்திகள்

வவுனியா ஈரப்பெரியகுளத்தில் கோர விபத்து: மூவர் பலி

வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி வந்த பிக்கப் ரக வாகனமும் யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஹென்ரனர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

பிக்கப் வாகனத்தில் பயணித்த 58, 53, 32 வயதுகளையுடைய ஒரு ஆணும், இரு பெண்களும் சம்பவ இடத்திலேயே மரணமாகியுள்ளதுடன் 30 வயதினையுடைய முகமத் சுது என்பவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரம்பெரியகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள். இறந்தவர்களின் சடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள போதும் அவர்களது பெயர் விபரங்களை உடனடியாக பெற முடியவில்லை. இதேவேளை, இறந்தவர்கள் பயணித்த வாகனத்தில் வைத்தியசாலைக் குறியீடு பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_1015 IMG_1016

IMG_1016 IMG_1019

N5