கூட்டு அரசாங்கத்திற்குள் பிரச்சினை : எஸ்.பி.திஸாநாயக்க
ஐ.தே.க – ஶ்ரீ.ல.சு.க கூட்டு அரசாங்கத்திற்கு பிரச்சினைகள் காணப்படுவதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு தனக்கு தேவையானவாறு செயற்படுகின்றது எனவும் அவ்வாறு செயற்பட முடியாது எனவும் எவ்வாறாயினும் தாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே அரசாங்கத்திற்குள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)




