செய்திகள்

கிளிநொச்சி சந்தையில் தீயினால் எரிந்த 122 வியாபாரிகளுக்கு 71 மில்லியன் நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது

கடந்த செம்ரெம்பா் மாதம் தீயினால் எரிந்து அழிந்துபோன கிளிநொச்சி பொதுச் சந்தை வியாபாரிகளுக்கு இன்று 28-12-2016 நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றம், புனா்வாழ்வு, சிறைசாலைகள் மறுசீரமைப்பு, இந்து சமய விவகார அமைச்சா் டிஎம் சுவாமிநாதன் இதனை வழங்கி வைத்துள்ளாா. இன்றைய தினம் 122 சந்தை வியாபாரிகளுக்கு 71 மில்லியன் ரூபாக்கள் நட்டஈடாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

15672707_10154111296512409_8619324902296968641_n

15698077_10154111296952409_6043864150200105824_nஇன்று காலை பத்து முப்பது மணிக்கு கிளிநொச்சி மாவட்டச் செலயகத்திறகு விஜயம் செய்த அவா் அங்கு மாவட்டச் செயலாளா் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் போதே தீயினால் எரிந்த சந்தை வியாபாரிகளுக்கு நட்டஈட்டை வழங்கி வைத்துள்ளாா்.

அந்த வகையில் 44 பான்சி கடைகளுக்கும், 53 புடவை கடைகளுக்கும்,22 பழக் கடைகளுக்கும்,2 தையல் கடைகளுக்கும், 01 தேனீா் கடைக்கும் நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது. இதில் 15 இலட்சம் ரூபா வீதம்நட்டஈடு 19 வியாபாரிகளுக்கும், பத்து இலட்சம் ரூபா வீதம் 13 பேருக்கும், ஜந்து இலட்சம் ரூபா வீதம் நட்டஈடு 40 வியாபாரிகளுக்கும், வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு ஏனைய வியாபாரிகளுக்கு மூன்று இலட்சம், இரண்டு இலட்சத்து ஜம்பதாயிரம், ஒரு இலடசம் என வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

15780903_10154111296187409_1825162277283118908_n

15781019_10154111296702409_6695880810255102354_n

15781161_10154111297217409_4653166477089864536_nஇந்த நிகழ்வில் அமைச்சருடன் வட மாகாண ஆளுநா் றெஜினோல்ட் குரே, இராஜாங்க அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினா் சி. சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் மு. சந்திரகுமாா், அரச அதிபா் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரச அதிபா் சத்தியசீலன், கரைச்சி பிரதேச செயலாளா் கோ. நாகேஸ்வரன், உள்ளுராட்சி உதவி ஆணையாளா் பிரபாகரன், கரைச்சி பிரதேச செயலாளா் க.கம்சநாதன்,வியாபாரிகள் என பலா் கலந்துகொண்டனா்.:-06