”கொலையாளிகள் கண்டுபிடிக்கப்பட போவதுமில்லை நீதி நிலைநாட்டப்பட போவதுமில்லை”
நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலை சம்பவங்கள் தொடர்பாக தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பான வழக்கின் தீர்ப்பின் பின்னர் இந்த சந்தேகங்கள் மேலெழுந்துள்ளதாகவும் சுகாதார தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டளாரான சமன் ரட்னபிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று பிரஜைகள் அமைப்புகளின் ஒன்றிய தொழிற்சங்க இயக்கத்தினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சர்வதேசத்திடமும் மற்றும் ஜெனிவாவிலும் ஜனாதிபதியும் மற்றும் அரசாங்கமும் பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளன. ஆனால் இவ்வாறான கொலை சம்பவங்கள் தொடர்பாக நீதி நிலைநாட்டப்படாமல் இருப்பது மீண்டும் பிரச்சினையை ஏற்படுத்தும். இவ்வாறான நிலையில் அடுத்ததாக பிரகீத் எக்னலிகொட , தாஜுதின் , சிவராம் உள்ளிட்டவர்களின் கொலை சம்பவங்கள் தொடர்பாகவும் இதே நிலைமைதான் ஏற்படுமா என்ற சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைகள் தொடர்பாக நீதி நிலைநாட்டப்படுமா என சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)




