செய்திகள்

ஜனவரி 12ற்கு முன்னர் பெறுபேறுகள் வெளியாகும் : பரீட்சைகள் ஆணையாளர்

க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஜனவரி 12ஆம் திகதிக்கு முன்னதாக வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படவில்லையெனவும் எனக் இம்முறை தொழிநுட்ப விஞ்ஞானப் பிரிவில் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை 30,000க்கும் அதிகம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய இவர்களது செயன்முறைப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் அதிக காலம் எடுத்துக் கொண்டதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார். -(3)