மகிந்தவின் ஆட்சி கவிழ்ப்பு கருத்து வேடிக்கையானது : ஐ.தே.க செயலாளர்
2017 ஆம் ஆண்டில் ஆட்சியைக் கவிழ்ப்பதாக மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள கருத்து தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் கபீர் ஹாசீம் பதிலளித்துள்ளார்.
ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசாங்கத்தை அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கமைய அடுத்த தேர்தல்வரை கவிழ்க்க முடியாது ஜனாதிபதித் தேர்தலில் தோல்விடைந்தது முதல் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். இவரின் கருத்துக்களும் அச்சுறுத்தலும் அரசாங்கத்தை பாதிக்காது என அவர் தெரிவித்துள்ளார்.




