செய்திகள்

நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து 10 பேர் வெளியேறுவர்?

நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு எதிர்வரும் 8ஆம் திகதியுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில் அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அரசாங்கத்திலிருந்து 10 பேர் வெளியேறி மகிந்த அணியுடன் இணைய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கம்பஹா , காலி , புத்தளம் , இரத்தினபுரி மற்றும் மொனராகல உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பிரபல அமைச்சர்கள் சிலரும் மற்றும் இராஜங்க அமைச்சர்கள் சிலரும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் செயற்பாடுகளில் அதிருப்தி காரணமாக இவர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்களே இவ்வாறு வெளியேறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)