புத்தாண்டில் அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்க மகிந்த அணி திட்டம்
அரசாங்கத்திற்கு வருட ஆரம்பத்திலிருந்தே நெருக்கடிகளை கொடுக்கும் வகையில் எதிர்வரும் நாட்களில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிரணியினர் திட்டமிட்டுள்ளனர்.
மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இந்த ஆர்ப்பட்டங்களுக்கு தயாராகி வருகின்றன.
அம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட அரச காணிகள் மற்றும் நிறுவனங்களை தனியார் நிறுவனங்களுக்கு கையளித்தல் , அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள பல்வேறு சட்டமூலங்கள் , புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாக கொண்டு இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. -(3)




