ஐ.தே.க உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி வழங்கிய உறுதி
அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது எனவும் அது பாதுகாக்கப்படுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று ஜனாதிபதிக்கு ஐக்கிய தேசிய கட்சியினருக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரநாயக்கவே இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் கவிழ போவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை. அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதாக ஜனாதிபதி சந்திப்பின் போது உறுதியளித்துள்ளார். யார் கனவு கண்டாலும் ஆட்சியை கவிழ்க்கும் கனவு பழிக்காது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)




