செய்திகள்

இலங்கையில் சமூக வலைத்தள மோசடிகள் அதிகரிப்பு : பெண்களே கவனம்

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தள மோசடிகளின் ஊடாக இலங்கையில் பாதிப்படையும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து செல்வதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு சைபர் கிறைம் தொடர்பில் மாதாந்தம் சுமார் 500 முறைப்பாடுகள் கிடைப்பதாகவும் இதில் அநேகமாக பாதிப்புக்குள்ளாவது பெண்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் மற்றும் இணைய தளத்தின் இயல்பு அறியாமல் புதிய முயற்சியில் ஈடுபட முனைவதன் விளைவாகவே அநேகமான பெண்கள் பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க நேரிடுவதாகவும் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளில் பாரதுாரமானவை உடன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்ற போதிலும் பாதிப்புக்குள்ளாகும் பெண்களின் புகைப்படம் அல்லது வீடியோ காட்சிகள் இணையத்திலிருந்து அகற்றப்படுவதற்கு முன்பாக குறிப்பிட்ட செக்கன்களுக்குள் அவை பல்வேறு தரப்பினரிடையிலும் துரிதமாக பகிரப்படுவதன் காரணமாக இதுகுறித்து பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி அதிகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)