செய்திகள்

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை : இன்று கொழும்பில் பேச்சுவார்த்தை

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையொன்று இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் இந்திய அரசின் விவசாய அமைச்சர் ராதா மொஹான்சிங் உள்ளிட்ட 11 உயர்மட்ட அதிகாரிகளும் இலங்கை சர்பாக மீன்பிடி அமைச்சர் மகிந்த அமரவீர அடங்கலாக 15 பேரும் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது முக்கியவிடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முதல் கடந்த வருடத்தில் புதுடில்லியில் இதுபோன்ற பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)