செய்திகள்

விலங்கு உணவுக்கென ஒதுக்கப்பட்ட பழுதடைந்த அரிசி மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது

விலங்கு உணவுகளுக்கென கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒதுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்ட பாவனைக்கு உதவாத ஒரு தொகை அரிசி புதிய அரிசி போல் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் விற்பனைசெய்யப்படுவதாக அகில இலங்கை கமத் தொழில் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன குற்றம்சுமத்தியுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை அரிசி பாவனைக்கு உதவாத நிலையில் அவை விலங்குணவுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.
இதன்படி விலங்கு உணவு உற்பத்தி நிறுவனங்களுக்கு குறித்த அரிசி 38 ரூபாய் வீதம் அரசாங்கத்தினால் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அது மீள் புதுப்பிக்கப்பட்டு வெளிநாட்டு அரிசி என கூறி 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் இது தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)