தயாரிப்பாளராகும் கபாலி இயக்குனர்
தமிழ் சினிமாவில் அட்டகத்தி மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் பா ரஞ்சித். இவர் ஆரம்பத்தில் வெங்கட் பிரபுவிடம் துணை இயக்குனராக பணியாற்றிவர், அதன் பிறகு இவர் எடுத்த மெட்ராஸ் திரைப்படம் பலத்த வரவேற்பு பெற்றது. இந்த மெட்ராஸ் திரைப்படம் தான் ரஜினி திரைப்படத்தை எடுக்கும் அளவுக்கு உதவியது என்று அவரே கூறியுள்ளார்.
கபாலிக்கு பின் இயக்குனர் பா ரஞ்சித் இந்திய சினிமா அளவில் பரபரப்பாக பேசப்பட்டார். இதனால் ரஜினியின் அடுத்தபடத்தையும் இவரே டைரக்ட் செய்கிறார். இவர் தற்போது தயாரிப்பு நிறுவனத்தை நிறுவியுள்ளார். ‘நீலம்’ புரொடக்சன் என்று பெயரிட்ட இப்படநிறுவனம் மூலம் ‘பரியேறும் பெருமாள்’ (PARIYERUM PERUMAL) என்ற படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் மாரி செல்வராஜ் (MARI SELVARAJ ). இவர் இயக்குநர் ராமிடம் ‘கற்றதுதமிழ்’, ‘தங்கமீன்கள்’, ‘தரமணி’ ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணிபுரிதுள்ளார்.
திருநெல்வேலி சுற்று வட்டாரப் பகுதியை சார்ந்த ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இக்கதை எழுதப்பட்டிருக்கிறது. லவ், ஆக்ஷன், என எல்லா தரப்பு ரசிகர்களை கவரும் விதமாகவும் கதை அமைந்துள்ளது. கிருமி படத்தில் ஹீரோவாக நடித்த கதிர் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக அனந்தி நடிக்கவுள்ளார். மிக விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.
N5




