செய்திகள்
எல்லை நிர்ணய விவகாரம் : 9ஆம் திகதி விசேட கட்சி தலைவர்கள் கூட்டம்
உள்ளுராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பாக எதிர்வரும் 9ஆம் திகதி விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
இதேவேளை எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கை நேற்றைய தினம் அமைச்சரினால் நிராகரிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. -(3)




