செய்திகள்

ஜனாதிபதியின் நாளைய யாழ் விஜயம் இரத்து

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாளைய தினம் மேற்கொள்ளப்பவிருந்த யாழ் விஜயம் தவிர்க்க முடியாத காரணங்களால் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகபிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
“ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள்” நிகழ்ச்சித் திட்டத்திற்கான அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொள்ளவும் மற்றும் வேறு வேலைத்திட்டங்கள் சிலவற்றை ஆரம்பித்து வைக்கவுமென நாளை தினம் ஜனாதிபதி யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருந்தார்.
இவரின் விஜயத்தையொட்டி பல்வேறு வேலைத்திட்டங்களும் அலங்கரிப்பு வேலைகளும் இடம்பெற்றன. எவ்வாறாயினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் வேறு தினமொன்றில் இந்த விஜயம் இடம்பெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)