செய்திகள்

யானையை விரட்ட சு.கவினரை அணி திரட்டும் இராஜங்க அமைச்சர்

ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிக்க சகலறும் ஒன்றிணைய வேண்டுமென இராஜங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியை வீழ்த்துவது என்பது கஸ்டமான காரியமல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பண்டாரவலை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
”காட்டில் உள்ள யானையாக இருந்தாலும் சரி , நாட்டில் உள்ள யானையானாலும் சரி எம்மை ஏமாற்ற முடியாது. 2017இல் யானையை தோற்கடிக்க எல்லா திசைகளிலும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மைத்திரியுடன் இருப்பவர்கள் , அவரிடம் இல்லாதவர்கள் எல்லாம் சேர்ந்தால் யானையை தோற்கடிக்க முடியும்.” என அவர் தெரிவித்துள்ளார். -(3)