விவசாயிகளுக்கு நஷ்டஈடு கொடுக்கும் அஜித். , உண்மையா ?
நடிகர் அஜித்தின் குணங்கள் என்ன என்பது நாம் சொல்லி புரியவைக்க வேண்டியதில்லை. ரசிகர்கள் , அவருடன் பணியாற்றியவர்கள் என பலரும் அறிவர்.
தமிழ் நாட்டில் கடந்த சில நாட்களாகவே விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு விவசாயம் செய்து பெரும் நஷடத்தை அடைந்து வருகின்றனர்.
சிலர் சோகம் தாங்கமுடியாமல் இயற்கை மரணம் எய்துகின்றனர். சிலர் தற்கொலை செய்துகொள்ளும் அவலநிலையும் நடக்கின்றது.
இந்நிலையில் அஜித் விவசாயிகளுக்கு நஷ்டஈடு தருவதாக ஓர் செய்தி வாட்ஸ் அப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.
அஜித்தின் இந்த நடவடிக்கைக்கு நன்றி என இயக்குனர் மனோபாலா தனது டிவிட்டரில் தெரிவித்திருந்தார். இத்தகவல் மிக வேகமாக பரவியதால் இது குறித்து அஜித் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வாழ்த்து தெரிவித்திருந்த மனோபாலா இப்போது தான் பதிவிட்டிருந்த ட்வீட்டையும் Delete செய்துள்ளார். இதனால் அந்த தகவல் வதந்தி என சொல்லப்பட்டுள்ளது.
N5




