செய்திகள்
பிரபல நடிகைகளுடன் கூட்டணி அமைக்கும் துல்கர் சல்மான், ரசிகர்கள் உற்சாகம்
துல்கர் சல்மான் தமிழில் வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் மூன்றாவது தமிழ் படமாக அறிமுக இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இப்படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேலும், இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நிவேதா பெதுராஜ், மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கவுள்ளார்களாம். துல்கர் மீண்டும் தமிழில் நடிக்க வருவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
N5




