பேருவளை கலவரத்தின் பின்னணில் கோதாவே நின்றார்
பேருவளையில் 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவர சம்பவத்தின் பின்னால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க ஆகியோரே இருந்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பொதுபல சேனா குறித்த சம்பவ தினத்தன்று அந்த பகுதியில் கூட்டத்தை நடத்தியபோது அதனை தடுக்க இடமளிக்காது அதற்கு தேவையான பாதுகாப்பை இவர்கள் இருவரே வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறாக கோதாபய செயற்பட்ட போதும் அவரிடம் கேள்வி கேட்க மகிந்த பயந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)




