வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை : மீண்டும் உறுதியாக கூறிய அரசாங்கம்
போர்க்குற்ற விசாரணை தொடர்பான நீதிமன்ற கட்டமைப்பில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமளிக்கப்படாது என அரசாங்கம் மீண்டும் உறுதியாக அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் நல்லிணக்க பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணி அரசாங்கத்திடம் கையளித்த அறிக்கையில் வெளிநாட்டு நீதிபதிகளின் அவசியம் தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்கும் வகையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்னவே இவ்வாறு அறிவித்தார்.
வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இங்கு இடமில்லை. அவர்கள் தலைமையில் நீதிவிசாரணை இங்கு இடம்பெறாது. அவர்கள் நீதிபதிகளாக இங்கு அமரமுடியாது.ஆனால் வெளிநாட்டு நீதிபதிகளின் தொழில்நுட்ப ஒத்துழைப்பை நாம் பெற்றுக்கொள்ள முடியம். ஐக்கிய நாடுகள் சபையும் இந்த விடயத்தில் உடன்பட்டுள்ளது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)




