செய்திகள்

பயமின்றி வெளிநாடு போய் வாருங்கள் : ஆட்சி கவிழ்ப்பு குறித்து ரணிலுக்கு மகிந்த பதில்

பயமின்றி வெளிநாடு சென்று வாருங்கள் நான் நீங்கள் இல்லாத நேரத்தில் ஆட்சியை கவிழ்க்க மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரிவித்துள்ளார்.
2017இல் ஆட்சியை கவிழ்ப்பதே தனது இலக்கு என மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ள நிலையில் அதற்கு பதிலளித்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முடிந்தால் தான் அடுத்த வாரத்தில் சுவிஸ்லாந்துக்கு மேற்கொள்ளும் விஜயத்தின் போது ஆட்சியை கவிழ்த்துக்கொள்மாறு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் பிரதமரின் கருத்துக்கு பதிலளித்துள்ள மகிந்த பயமின்றி போய் வாருங்கள். நீங்கள் இல்லாத நேரத்தில் நான் அவ்வாறு நடந்துக்கொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளார். -(3)