போதைப் பொருள் அடிமைகளுக்கு பொதுமன்னிப்பு காலம்
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வை பெற்றுக்கொள்ளும் வகையில் பொது மன்னிப்பு காலமொன்றை பிரகடனப்படுத்துவதற்கு போதைப் பொருள் ஒழிப்பு செயலணி ஆராய்ந்து வருகின்றது.
இந்த காலத்தில் புனர்வாழ்வுக்காக சரணடையாத போதைப் பொருள் அடிமைகளை கண்டுபிடித்து கைது செய்யும் வகையில் விசேட வேலைத் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கும் ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது..
தற்போது நாட்டில் 50,000ற்கும் மேற்பட்ட போதைப் பொருள் அடிமைகளை இனங்கண்டுள்ளதாகவும் இவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தி போதைப் பொருளிலிருந்து விடுதலை செய்வதற்காக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை கடந்த காலங்களில் பல்வேறு இடங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களை பொதுமக்கள் மத்தியில் அழிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. -(3)




