செய்திகள்

ஆட்சி கவிழ்ப்பை சுதந்திரக் கட்சி விரும்பவில்லை

நாட்டில் ஸ்திரமற்ற நிலைமையை ஏற்படுத்த ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் இடமளிக்காது என ஐ.ம.சு.கூ செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டு வரை தற்போதைய ஆட்சி தொடருமெனவும் இது தொடர்பாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாகவும் எந்தவகையிலும் ஆட்சி கவிழ்ப்புக்கு இடமளித்து நாட்டில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்த விட மாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)