அடுத்த வாரமளவில் GSP வரிச்சலுகையை பெற்றுக்கொள்ள முடியும்: ஜனாதிபதி
வரிச்சலுகையை அடுத்த வாரமளவில் பெற்றுக்கொள்ள முடியும் எனும் உறுதியான தகவல் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மேலும், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் பேட்டை தொடர்பில் எவ்வித உடன்படிக்கையும் இதுவரை தயாரிக்கப்படவில்லை எனவும் அமைச்சர்கள் சிலர் இவ்விடயத்தை தவறாகப் புரிந்துகொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அரசாங்கத்திற்கு பொருளாதார நெருக்கடி காணப்படுகின்றமை உண்மை என கூறிய ஜனாதிபதி, 9 இலட்சம் கோடி ரூபாவை வெளிநாடுகளுக்கு கடனாக செலுத்த வேண்டியிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
சபாநாயகர் கரு ஜயசூரியவையும் தம்மையும் இணைத்துக்கொண்டால் மாத்திரமே மற்றுமொரு அரசாங்கத்தை அமைக்க முடியும் எனவும் அதனை எவராலும் ஒருபோதும் செய்ய முடியாது எனவும் ஜனாதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற கண்டி – ஹல் ஒலுவ, தொடங்வல பாலத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்விலேயே ஜனாதிபதி இந்த விடயங்களைப் பகிர்ந்தார்.:-06




