செய்திகள்
நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி போராட்டத்திற்கு மகிந்த அணி திட்டம்
அம்பாந்தோட்டை பகுதியில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இன்று பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் எதிர்வரும் 14 நாட்களுக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாதவாறு நேற்றைய தினம் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் எத்தகைய தடையுத்தரவு காணப்பட்டாலும் திட்டமிட்டப்படி தமது போராட்டம் இன்றைய தினம் நடைபெறுமென ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர். -(3)




