அம்பாந்தோட்டை மோதல் தொடர்பாக 52 பேர் கைது
அம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 23 பேர் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை தேடி தொடர்ந்தும் பிரதேசத்தில் தேடுதல்கள் நடத்தப்படுகின்றன.
நேற்று அரசாங்கத்தினால் பொருளாதார வர்த்தக வலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்ற போது அந்தப் பகுதியில் ஒன்றிணைந்த எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் போது மோதல் நிலைமை ஏற்பட்டிருந்தத.
இதில் 25 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. -(3)




