செய்திகள்

பொதுபல சேனாவுக்கு வந்த சிக்கல்

சிங்கள பௌத்தத்தை பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது யாருடன் கைகோர்ப்பது என்ற பிரச்சினைக்குள் பொதுபல சேனா இருப்பதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று நுககோட நகரில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் தலைவர்களாக சிங்கள பௌத்தர்கள் இருந்தாலும் அவர்களுக்கான நிகழ்ச்சி நிரல்களை தயாரிப்பவர்கள் சிங்கள பௌத்தர்கள் இல்லை. இன்று ஐக்கிய தேசிய கட்சி , ஐ.ம.சு.கூ மற்றும் ஜே.வி.பி என சகல கட்சிகளும் பொது பலசேனாவை அழிக்கும் நோக்கிலேயே செயற்படுகின்றது. இதனால் நாம் யாருடன் கைகோர்த்து செல்வது என்ற சிக்கலில் உள்ளோம். என அவர் தெரிவித்துள்ளார். -(3)