செய்திகள்

நாட்டின் இறையான்மைக்கு பாதிப்பில்லாதவாறே சகல ஒப்பந்தங்களும் இருக்கும் : ஜனாதிபதி

சமகால அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வெளிநாட்டு கொள்கை மற்றும் நல்லாட்சி செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச சமூகம் திருப்தி அடைந்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கண்டியில் மகாவலி ஆற்றுக்குக் குறுக்கே நிர்மாணிக்கப்பட்ட புதிய பாலத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
சமகால அரசாங்கத்தினால் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கையின் காரணமாக வெளிநாட்டுக் கொள்கை மற்றும் நல்லாட்சி கொள்கைகள் குறித்து சர்வதேச சமூகம் தனது திருப்தியை வெளியிட்டுள்ளது. பல வெளிநாடுகள் மற்றும் வெளிநாட்டுக் கம்பனிகள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றன.
வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் போது நாட்டின் இறையாண்மைக்கும் காணி உரிமைக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாதவகையிலேNயு ஒப்பந்தங்கள் முன்னெடுக்கப்படும் . இதேபோன்று ஹம்பாந்தோட்டையில் உள்ள புனிதஸ்தலங்கள் மற்றும் பொதுக் கட்டங்களுக்கு எதுவித பாதிப்புக்களும் ஏற்படாத வகையிலேயே வெளிநாட்டு முதலீடுகளுக்கு இடமளிக்கப்படும். என அவர் தெரிவித்துள்ளார். -(3)