செய்திகள்

வடக்கை விடவும் அதிக படையினர் அம்பாந்தோட்டையில் குவிக்கப்பட்டுள்ளனர் : மகிந்த

வடமராட்சி, கிளிநொச்சி விடவும் அதிகமாக அம்பாந்தோட்டையில் பொலிஸாரும் இராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது என மகிந்த ராஜபகஷ் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் இன்று ஏற்பட்ட மோதல் நிலவரம் தொடர்பாக நேற்று ஹங்குரன்கெதவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நான் இங்கு வருகை தரும் சந்தர்ப்பத்தில் ஹம்பாந்தோட்டையில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். வடமராட்சி, கிளிநொச்சி பகுதிகளை விட அங்கு அதிக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இருப்பதாகக் கூறினர். வாகனங்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஏன் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்? தமது காணிகளை வெளிநாட்டவர்களுக்கு வழங்குவதாலேயே அவர்கள் குழப்பமடைந்துள்ளனர். விவசாயத்தையே நாம் இல்லாது செய்கின்றோம். நானே இதனை ஆரம்பித்ததாகத் தற்போது கூறுகின்றனர். ஆம். 750 ஏக்கரில் தொழில் பேட்டையொன்றை நாம் ஆரம்பித்தோம். என்னிடம் 1000 ஏக்கரைக் கோரினர். தொழில்பேட்டையை 1000 ஏக்கரில் அமைக்க வேண்டியதில்லை, 750 ஏக்கரில் அமைத்தால் போதும் என நான் கூறினேன். என அவர் தெரிவித்துள்ளார். -(3)