விஜய் சேதுபதியின் வேகம் – வியக்கும் திரையுலகம்
இன்றைய அனைத்து இளைஞர்களின் பிடித்தமான ஒரு நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். கடந்த வருடம் மட்டுமே கிட்டத்தட்ட 6 படங்களுக்கு மேல் இவர் நடிப்பில் வெளிவந்தது.
தனது நடிப்பால் அனைவரையும் வியக்க வைத்த நடிகர் விஜய் சேதுபதி. இந்நிலையில் இவர் தனது அடுத்தடுத்த படங்களான கவண், விக்ரம் வேதா, தியாகராஜா குமராஜாவின் படம் என்று மிக வேகமாக எல்லா படங்களையும் நடித்து வருகிறார். இதில் கவண், விக்ரம் வேதா படத்தின் வேலைகளை முடித்து கொடுத்து அடுத்த பன்னீர் செல்வம் இயக்கும் கருப்பன் படத்தில் நடிக்கவுள்ளார்.
எப்படி விஜய் சேதுபதி ஓய்வில்லாமல் ஒரே நேரத்தில் பல படங்களை நடித்து கொடுக்கிறார் என்று தமிழ் திரையுலகமே வியந்து பேசுகிறது.
N5




