செய்திகள்

இந்த அரசாங்கத்துடன் இணைய முடியும் ஆனால் புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாது : மகிந்தவுக்கு மைத்திரி பதில்

புதிய அரசாங்கமொன்று அமைக்கப்படாது எனவும் யாருக்கேனும் தன்னுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்குமாகவிருதால் அவர்களுக்கு தற்போதைய அரசாங்கத்துடன் இணைய முடியுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை கொழும்பில் நடைபெற்ற ஜனாதிபதி மைத்திரியின் பதவியேற்பின் இரண்டாம் வருட நிறைவு விழாவில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொருளதார நெருக்கடி மற்றும் சர்வதேசத்தின் நெருக்கடிக்கு முகம் கொடுக்க முடியாதேத அன்றைய ஆட்சியாளர் பின்வாங்கி ஓடியுள்ளார். ஆனால் நாம் பின் வாங்கப் போவதில்லை. நாடு என்ற ரீதியில் நாம் முன்னோக்கியே செல்வோம். யாரும் கனவு காண்பதை போன்று இந்த அரசாங்கத்தை வீழ்த்த முடியாது. யாரும் என்னுடன் சேர்ந்து புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென நினைத்தால் அதற்கு இடமில்லை. வேண்டுமென்றால் இந்த அரசாங்கத்துடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப வாருங்கள் என கேட்டுக்கொள்கின்றேன். என அவர் தெரிவித்துள்ளார். (3)02-7 04-5 10-1