எமது பயணத்தை யாராலும் நிறுத்த முடியாது
தமது அரசாங்கத்தின் பயணத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு நேற்று கொழும்பில் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் , சுதந்திரம் என்பன பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த அரசாங்கம் நிலையான பொருளாதார அபிவிருத்தியை நோக்கியே பயணிக்கிறது எமது பயணத்தை யாராலும் தடுக்க முடியாது. நாம் பின்வங்க மாட்டோம். என அவர் தெரிவித்துள்ளார். -(3)




