செய்திகள்

அம்பாந்தோட்டைக்கு வேண்டாமென்றால் பொலனறுவைக்கு தாருங்கள் : ரணிலிடம் கேட்ட மைத்திரி

அம்பாந்தோட்டைக்கு பொருளதார வலயங்கள் வேண்டாமென்றால் அதனை பொலனறுவைக்கு தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தான் ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு நேற்று மாலை கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொழிற்சாலைகள் அம்பாந்தோட்டைக்கு வேண்டாமென எதிர்க்கின்றனர். அப்படி வேண்டமென்றால் அதனை எனது மாவட்டமான பொலனறுவைக்கு தருமாறு பிரதமரை கேட்கின்றேன். என அவர் தெரிவித்துள்ளார். -(3)