செய்திகள்
2020 தேர்தலில் மைத்திரியை களமிறக்க சு.கவினர் முயற்சி : நிறைவேற்று அதிகாரத்தை பேணவும் தீர்மானம்?
2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலிலும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை போட்டியிட செய்வதற்கும் மற்றும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அவ்வாறே தொடர்ந்தும் பேணுவதற்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்று கூடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடகங்கள் சில தெரிவித்துள்ளன. -(3)




